Friday, April 4, 2014

தலாக்கை நோக்கி இல்லறக் கப்பல்!

சுன்னத்தான இல்லறம்:

இல்லறச் சிக்கல்கள் எதுவாயினும், அவற்றுக்கு அழகிய தீர்வுகள் இருக்கின்றன! இன்ஷா அல்லாஹ் இது நூறு சதவிகிதம் சாத்தியம்!

பல கணவன் மனைவியர் தங்களது இல்லறத்தில் பிரச்னைகள் தோன்றி அவை மேலும் சிக்கலாகி விட்டால், அவை தீர்க்கப்படவே முடியாது என்று முடிவுக்கு வந்து விடுகின்றனர்.


"அவர் திருந்தவே மாட்டார் - அவர் திருந்துவதற்கு சாத்தியமே கிடையாது; நான் எல்லா வழிகளிலும் முயற்சி செய்து பார்த்து விட்டேன்! "ம்ஹூம்! சாத்தியமே கிடையாது!" - இது மனைவியரின் புலம்பல்!

"அவளாவது திருந்துவதாவது! அவள் திருந்துவதற்கு வாய்ப்பே கிடையாது; நானும் எல்லா வழிகளிலும் முயற்சி செய்து பார்த்து விட்டேன்! "ம்ஹூம்! சாத்தியமில்லை!" - இது கணவன்மார்களின் புலம்பல்!

நமது கேள்வி என்னவென்றால் - எல்லா வழிகளிலும் முயற்சி செய்து பார்த்து விட்டோம்" என்று சொல்கிறார்களே, அப்படி என்ன முயற்சியெல்லாம் இவர்கள் செய்து பார்த்து விட்டு இப்படி ஒரு முடிவுக்கு வந்தார்கள்?

இவர்கள் செய்த முயற்சிகளெல்லாமே தவறான வழியில் செய்யப்பட்ட முயற்சிகள்! இன்னும் சொல்லப்போனால், இவர்களது இல்லறம் சிக்கலாகிப் போனதற்குக் காரணமே இவர்களது தப்பும் தவறுமான அணுகுமுறைகள் தாம்!

"நான் எத்தனையோ தடவை சொல்லிப் பார்த்து விட்டேன்! அவள் கேட்கவே இல்லை!" என்பார்கள். ஆனால் "எப்படிச் சொன்னீர்கள்?" என்று கேட்டால் - விழிப்பார்கள்.

இவர்களது தவறான அணுகுமுறைகள் என்னென்ன தெரியுமா?

1. பேசும்போது கடினமான சொற்களைப் பயன்படுத்துவது

2. திட்டுவது;

3. மட்டம் தட்டுவது; அவமானப் படுத்துவது;

4. குற்றம் சுமத்துவது;

5. என் மேல் எந்தத் தவறும் இல்லை என்று அடித்துப் பேசுவது;

6. ஒருவர் பேசும்போது - அதனைக் காதில் வாங்க மறுப்பது; குறுக்கிட்டுப் பேசுவது;

7. சின்ன விஷயங்களையும் பெரிய சண்டைகளாக மாற்றுவது;

8. பதில் பேசாமல் ஒதுங்கிக் கொண்டு விடுவது.

இது எதிலே போய் முடியும் தெரியுமா?

தலாக் எனும் மண விலக்கில் தான் போய் முடியும்!

எனவே கருத்து வேறுபாடுகள் குறித்து பேசிடும்போது கடைபிடிக்க வேண்டிய சுன்னத்தான அணுகு முறைகள் என்னென்ன என்பதை கணவன் மனைவியர் அறிந்து தெளிந்து அவற்றை அவ்வாறே பின்பற்றிட முன் வர வேண்டும்:

அவை என்னென்ன?

அடுத்து வரும் பதிவில்...

No comments:

Post a Comment