Wednesday, May 21, 2014

என் தோல்வி அனைத்துக்கும் என் கணவனே காரணம்!


முந்தைய பதிவில் சொல்லப்பட்ட அதே போன்ற உதாரணத்தை மனைவிக்கும் நாம் சொல்லலாம்.

மனைவியின் உறவினர் அன்று மாலை வீட்டுக்கு வருவதனால், டின்னருக்காக, மனைவி கொஞ்சம் முந்திரிப்பருப்பும் திராட்சைப்பழமும் வாங்கிக் கொண்டு வரச்சொல்ல, மாலையில் அதனை வாங்க மறந்து விட்டுக் கணவன் வீட்டுக்கு சற்று தாமதமாகவே வந்து நிற்க – மனைவி “எங்கே முந்திரியும் திராட்சையும்?” என்று கேட்க,


“அடடா, மறந்து விட்டேனே!” என்று கணவன் சொல்ல

- கோபம் வருமா வராதா மனைவிக்கு?

“உங்கள நம்பிக் காத்துக்கிட்டு இருந்தேனே! ................................ .................. ....................!

மனைவி முந்திரியும் திராட்சையும் இல்லாமலேயே இனிப்பு செய்து சமாளிக்க அது திருப்தியில்லாமல் போக – (“அவர்கள் வீட்டுக்கு நான் போயிருந்த போது என்னமாய் என்னைக் கவனித்தார்கள்!) இந்த அவமானமான சூழ்நிலைக்குக் கணவனே முழுக் காரணம் என்று நினைக்கும் மனைவிமார்களே குற்றம் சுமத்தும் மனைவிமார்கள்!

எப்போதாவது தான் இது போன்று நடக்கிறது என்றால் மறந்து போகலாம். ஆனால் இரண்டு நாளைக்கு ஒரு முறை அல்லது ஒரு நாளிலேயே பல முறை என்று ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயத்துக்கும் கணவனை மனைவி குற்றம் சுமத்திக் கொண்டிருந்தால் என்னவாகும்?

“இவரை இனி நாம் நம்பவே முடியாது!” என்று முடிவு கட்டி விடுகிறார் மனைவி!

இவ்வாறு தொடர்ந்து ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்திக்கொண்டிருக்கும் நிலையிலிருந்து இருவரும் மீள்வது எப்படி என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

ஆனால் - ஒன்றை இங்கே வலியுருத்திச் சொல்ல விரும்புவது என்னவென்றால் = இது போன்ற குற்றம் சுமத்தும் கணவன் மனைவியர்கள் இரண்டு ஆண்டுகளிலிருந்து நான்கு ஆண்டுகளுக்குள் விவாக விலக்கை நாடி விடுகின்றார்கள்!

தொடர்ந்து குற்றம் சுமத்துதல் என்பது விவாக விலக்கு ஏற்படுவதற்கான ஒரு முன்னெச்சரிக்கை!

No comments:

Post a Comment