Wednesday, May 21, 2014

"என் தோல்வி அனைத்துக்கும் என் துணைவியே காரணம்??"

ஆங்கிலத்தில் Blaming என்று ஒரு சொல், இதன் பொருள் என்ன?

கடுமையான சொற்களால் ஒருவரை குற்றம் சுமத்துவதற்குப் பெயர் தான் Blaming!

இதில் வார்த்தைகளாலேயே ஒருவரை தண்டிப்பதும், மட்டம் தட்டுவதும், இழிவு படுத்துவதும் அடங்கும். பார்க்கின்ற பார்வையினாலும், முகம் காட்டும் கோணல்களாலும் ஒருவரைத் தண்டிப்பதும் அடங்கும்!


ஏன் கணவனோ அல்லது மனைவியோ இவ்வாறு ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ள வேண்டும்?

ஒரு சான்று:

கணவன் அவசரமாக அலுவலகம் சென்றிட வேண்டும். மனைவியிடம் ஒரு சட்டை மற்றும் ஒரு பேண்ட்ஸ் அயர்ன் செய்து சீக்கிரம் ரெடி பண்ணி வைக்கச் சொல்கிறான்.

மனைவி அயர்ன் செய்வதற்குத் தயாராகும்போது, தொலைபேசி அழைப்பு ஒன்று வருகிறது. அது மனைவியின் நெருங்கிய தோழி ஒருவரிடமிருந்து வந்த வெளிநாட்டு அழைப்பு. அவர்கள் பேசி நீண்ட நாட்களாகி விட்டன.

பல தடவை போன் செய்த போது இணைப்பு கிடைக்கவில்லை. இப்போது கிடைத்திருக்கிறது.

ஒரு பத்து நிமிடம் பேசி விட்டு விரைவில் பெட்டி போட்டுக் கொடுத்து விடுவோம் - என்று பேசுகிறார் தோழியிடம். பேச்சு சுவாரசியத்தில் நேரம் போனது தெரியவில்லை! அரை மணி நேரம் பேச்சு தொடர்கிறது.

கணவன் குளித்து விட்டு ரெடியாகி வரும்போது, மனைவி கையில் செல் போன்! தோளில் சட்டை பேன்ட்ஸ்.

கோபம் வருமா வராதா கணவனுக்கு?

"உன்னைப் போய் அயர்ன் பண்ணிக் கேட்டேனே! .......... .................. .......................!"

சட்டை பேண்டை தானே எடுத்துப்போய் தானே அயர்ன் செய்து கொண்டு, அவசர அவசரமாகப் பசியாறி விட்டு, அவசர அவசரமாக அலுவலகம் சென்றால் முக்கியக் கோப்புகளை வீட்டிலேயே மறந்து விட்டு வந்தது நினைவுக்கு வர... அலுவலகத்தில் மேல் அதிகாரியிடம் திட்டு வாங்கிக் கொண்டு வீட்டுக்குத் திரும்பினால்.... தனது தோல்வி அனைத்துக்கும் மனைவியே காரணம் என்று நினைக்கும் கணவன்மார்களே குற்றம் சுமத்தும் கணவன்மார்கள்!

எப்போதாவது தான் இது போன்று நடக்கிறது என்றால் மறந்து போகலாம். ஆனால் இரண்டு நாளைக்கு ஒரு முறை அல்லது ஒரு நாளிலேயே பல முறை என்று ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயத்துக்கும் குற்றம் சுமத்திக் கொண்டிருந்தால் என்னவாகும்?

இன்ஷா அல்லாஹ் இதனை நாம் தொடர்ந்து பார்ப்போமே...

No comments:

Post a Comment