இஸ்லாம் ஓர் அழகியல் மார்க்கம்! “இஹ்ஸான்” - என்பது இஸ்லாத்தின் அடித்தளத்தில் இருந்து கட்டி எழுப்பப்படும் ஓர் அழகியல் கோட்பாடு! CONCEPT OF BEAUTY!
Sunday, October 12, 2025
இஸ்லாத்தின் பெண்களின் நிலை!
Tuesday, October 7, 2025
திருமணச் சிக்கல்கள் - தீர்வுகள்!
அக்டோபர் 07, 2025
மாமியார் கொடுமை என்றால் அது எப்படியிருக்கும் என்று எனக்கு 12 வயதிலேயே தெரியும். அதனைக் கண்ணால் கண்டவன் நான். ஆனால் அந்தக் கொடுமைகள் - ஒரு ஐம்பதுக்கும் மேலான ஆண்டுகளுக்குப் பிறகு இன்றும் தொடர்வதை வேதனையுடன் கவனித்து வருகிறேன்.
அது போல - கணவன்-மனைவியர் இல்லற வாழ்விலும் ஏகப்பட்ட சிக்கல்கள். புரிந்துணர்வு என்பது மிகவும் குறைவே. பொதுவாக நற்பண்புகள் (akhlaq) குறித்தே என் முழுக் கவனத்தையும் செலுத்தி வந்து கொண்டிருந்த நான் - திருமண வாழ்வில் நற்குணங்களைக் கடைபிடிப்பதில் நாம் ஏன் அலட்சியமாக இருகின்றோம் என்றும் சிந்தித்து வந்திருக்கின்றேன்.
மேலும் - நம் சமூகத்தில் நிலவுகின்ற விவாகரத்து குறித்த அணுகுமுறைகளையும் கவலையுடன் கவனித்துக் கொண்டு தான் வருகின்றேன். விவாக விலக்கு பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறதே தவிர - அதனைக் குறைக்கும் வழிதான் ஏனோ புலப்படவில்லை!
நூல்கள் வாயிலாகவும், இணைய தளங்கள் வாயிலாகவும் - ஆன்மிக ரீதியான, உளவியல் ரீதியான (psycho-spiritual) இஸ்லாமிய வழிகாட்டுதல்களைத் தொடர்ந்து அறிந்து கொள்வதில் ஆர்வம் செலுத்தியிருக்கிறேன். மிகச் சிறந்த மார்க்க அறிஞர்கள் மற்றும் இஸ்லாமிய உளவியல் ஆய்வாளர்களின் கருத்துக்களையெல்லாம் சேகரித்து உள்வாங்கியிருக்கின்றேன்.
திருமணத்துக்கு முன்னும் பின்னும் தேவைப்படுகின்ற வழிகாட்டுதல்கள் குறித்து சொற்பொழிவாற்றியிருக்கின்றேன். வகுப்புகள் நடத்தியிருக்கின்றேன். பயிலரங்கங்கள் நடத்தியிருக்கின்றேன். பல கட்டுரைகள் எழுதியிருக்கின்றேன். தனிப்பட்ட முறையில் பலருக்கு திருமண ஆலோசனைகளும் வழங்கியிருக்கின்றேன்.
ஆனாலும் - எனது அணுகுமுறையில் - எனக்கு திருப்தி ஏற்பட்டதே இல்லை! குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவுக்கு எந்த ஒரு மாற்றத்தையும் என்னால் ஏற்படுத்திட இயலவில்லை!
ஆனால் அதற்கான காரணம் என்னவென்று புரிந்தது - ஒரு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தான்…..
தொடர்ந்து பேசுவோம்.
Sunday, January 4, 2015
முதல் மூன்று நிமிடங்கள் மிகவும் முக்கியம்!
அந்த முதல் மூன்று நிமிடங்கள் அவ்வளவு முக்கியமாம்!
Saturday, December 6, 2014
சுன்னத்தான இல்லறம்! - நூல் வடிவில்.....
சுன்னத்தான இல்லறம்!
S.A மன்சூர் அலி
முன்னுரைஇன்னும், நீங்கள் அவர்களிடம் மன அமைதி பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே மவத்தத் எனும் அன்பையும், இரக்கத்தையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (குர்ஆன்: 30:21)
Friday, December 5, 2014
தொலைபேசி தலாக்!
“எஸ்.எம்.எஸ் வழியே அல்லது தொலைபேசி வழியே தலாக் சொன்னால் தலாக் நிகழ்ந்து விடுமா?” ஆம்! நிகழ்ந்து விடும் என்று ஒரே வரியில் பதில் அளிக்கப் படுகிறது.
ஆனால் பின்னணி என்ன என்பது புரிந்து கொள்ளப் படாமலே பதில்கள் அளிக்கப் படுவதால், பலரது வாழ்க்கை பாதிக்கப் படுகிறது என்பதை ஏனோ புரிந்து கொள்ளத் தவறி விடுகிறோம். சாதாரணமாக மருத்துவம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் மருத்துவர்கள் கூட, தங்கள் ஆலோசனைகளை எழுதி விட்டு, இறுதியில் அருகில் உள்ள மருத்துவரை அணுகவும் என்று முடிக்கிறார்கள்.
Tuesday, November 18, 2014
இது யார் சொல்லித்தந்ததோ தெரியவில்லை!
Thursday, November 13, 2014
மாய சுழற்சி மறைந்து விட்டதா?
மற்றவர்களால் - தான் - கண்ணியப்படுத்தப்பட வேண்டும்! (To be respected). இதுவே ஒவ்வொரு ஆண்மகனின் முதன்மையான தேவையும், எதிர்பார்ப்பும் ஆகும்! (Primary Need for men).
இதனை அனைவருக்கும் முதலாக ஒரு மனைவி புரிந்து கொண்டிருக்க வேண்டும். அதாவது ஒரு கணவனின் முதல் தேவையே - அவன் கண்ணியப் படுத்தப்படுவது தான்!
