கருத்துப் பரிமாற்ற இடைவெளி!
Communication Gap!
இரண்டு வெவ்வேறு வகை மாம்பழங்கள்! கழுவி சுத்தம் செய்து அறிந்து இரண்டு தனித்தனித் தட்டுகளில் வைத்து மூடி உணவு மேசையில் வைத்திருக்கிறார் மனைவி!
இரண்டையும் திறந்து பார்க்கிறார் கணவர். ஏன் தனித்தனித் தட்டுகள் என்பது பற்றி கணவர் சிந்திக்கவேயில்லை! ஒரு தட்டில் உள்ள பழம் முழுவதையும் சாப்பிட்டு விட்டார்.
“நான் ஒரு பழம் முழுவதையும் சாப்பிட்டு விட்டேன்! இன்னொன்றை நீங்கள் சாப்பிட்டு விடுங்கள்!” என்று மனைவியிடம் சொல்கிறார்.
“ஏங்க! இரண்டும் வெவ்வேறு பழம்ங்க! இதில் கொஞ்சம் அதில் கொஞ்சம் என்று சாப்பிட்டு இருக்கலாமில்ல?” - என்கிறார் மனைவி!
எனக்கு எப்படிம்மா தெரியும்? நான் சாப்பிடுவதற்கு முன்னரே அல்லவா சொல்லியிருக்க வேண்டும்?
ஏன்? பார்த்தா தெரியவில்லை? இந்த பழம் வேறு அந்தப் பழம் வேறு என்று?
எனக்கு எப்படிம்மா தெரியும்? எல்லாமே ஒரே நிறத்தில் ஒரே அளவில் தான் இருந்தன. என்ன செய்ய?
ஏங்க? ஒரே மாதிரி பழம் என்றால் நான் ஏங்க இரண்டு தட்டுகளில் தனித்தனியாக வைக்கிறேன்? என்கிறார் அவர்.
அது என் சிந்தனைக்கே வரவில்லையம்மா! என் அறிவில் ஓடிக் கொண்டிருந்தது - “என்னுடைய பிஸினஸ் பிரச்னைகள் சம்பந்தமாக என்ன செய்யலாம் என்றல்லவா யோசித்துக் கொண்டிருந்தேன்!!!
***
இந்த கருத்துப் பரிமாற்ற இடைவெளியைத் தவிர்ப்பது எப்படி?
தான் இரண்டு தட்டுகளில் தனித்தனியாக வைத்தால் - கணவர் அதனைப் புரிந்து கொள்வார் என்று நினைத்துக் கொள்வது தான் தவறு! பழத்துண்டுகளைப் பார்த்தவுடனேயே - இவை வெவ்வேறு பழங்கள் என்று அவர் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொள்வது தவறு!
எனவே - எந்த ஒரு செய்தியாக இருந்தாலும் - அதனை முழுமையாக - எந்த ஒரு ஊகத்துக்கும் இடம் கொடுக்காமல் - புரிய வைத்திட வேண்டும்!
இல்லாவிட்டால் கருத்துப் பரிமாற்ற இடைவெளி தான்!
The result is a communication gap!
No comments:
Post a Comment