Showing posts with label கருத்துகள். Show all posts
Showing posts with label கருத்துகள். Show all posts

Friday, March 7, 2014

திருமணத்துக்கு முன் - வழிகாட்டும் ஆலோசனை!

திருமணத்துக்கு முன் - வழிகாட்டும் ஆலோசனை!
(Premarital Counselling)

திருமணம் ஆகாத ஒரு இருபது மாணவிகளுக்கு திருமணத்துக்கு முன் - வழிகாட்டும் ஆலோசனை (Premarital Counselling) கடந்த 13 - 05 - 2012 அன்று வழங்கப்பட்டது.

அதில் கலந்து கொண்ட மாணவிகள், வழங்கப்பட்ட ஆலோசனைகள் பற்றி தங்கள் கருத்துகளைப் பதிவு செய்து தந்தார்கள். அவற்றில் சில் இதோ:

நீங்கள் சொன்ன அனைத்து ஆலோசனைகளும் பயன் உள்ளதாக இருந்தன. எங்கள் சந்தேகங்கள் அனைத்தையும் தீர்த்தீர்கள். எங்கள் வாழ்க்கையில் எதையும் யோசித்து செயல் படுத்தும் முறையை நீங்கள் சொன்னீர்கள். இன்ஷா அல்லாஹ், நாங்கள் அவை அனைத்தையும் கடைபிடிப்போம். - ஒரு மாணவி  


இந்தப் பருவத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் எல்லாரும் சொல்கிற மாதிரி தான் நீங்களும் சொல்வீர்கள் என்று நினைத்தேன். ஆனால் புது மாதிரியாக இருந்தது உங்கள் ஆலோசனை.    - ஒரு மாணவி

எனக்கு கல்யாணம் அப்படின்னா ரொம்ப பயமா இருந்தது. ஆனா இப்போ ஓரளவுக்கு அந்த பயம் போயிடுச்சு. - ஒரு மாணவி

இந்த தலைப்பை எப்படி இஸ்லாத்தோடு இணைத்து சொல்வீர்கள் (?) என்று நினைத்தேன். மாஷா அல்லாஹ்! நினைத்ததை விட அருமையாக வகுப்பு எடுத்தீர்கள். - ஒரு மாணவி

கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தணும் என்பதை அருமையாகச் சொன்னீர்கள். - ஒரு மாணவி

இந்த வயதில் எங்களுக்கு அவசியமான ஆலோசனைகளையும், காதல் (love) பற்றியும், இந்த வயசில் நாங்கள் தவறு செய்யாமல் இருக்க அதற்கு அல்லாஹ் கூறியுள்ள வழிகளையும் சரியான நேரத்தில் எங்களுக்கு தந்ததற்கு நன்றி. - ஒரு மாணவி

இந்த தலைப்பில் நீங்கள் வெளிப்படையாக பேசியது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. - ஒரு மாணவி

இந்த வகுப்பில் நான் அதிகமான விஷயங்களை புரிந்து கொண்டேன். வாழ்க்கையின் முக்கியமான பகுதியை பற்றி தெரிந்து கொண்டேன். என்னுடைய குழப்பமான கேள்விக்கு தீர்வு கிடைத்தது. மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. யாரும் இதைப்பற்றி என்னிடம் சொன்னது இல்லை. முதன் முதலாக நீங்கள் நடத்தியது எனக்கு பயனாக இருந்தது. - ஒரு மாணவி

Thursday, December 26, 2013

மனைவி ஒரு பொக்கிஷம்! – பயிற்சி பற்றிய கருத்துகள்

காரைக்கால் IIWF சார்பாக நடை பெற்ற - மனைவி ஒரு பொக்கிஷம்! – பயிற்சி முகாமில் கலந்து கொண்டோர் கருத்துக்கள்:

அல்ஹம்துலில்லாஹ்! எங்கள் வாழ்க்கைக்குத் தேவையான எஸென்ஸ். உள் மனதில் உள்ள விஷயங்களை அசைபோடச் செய்தீர்கள்; சில விஷயங்கள் எங்கள் வாழ்க்கையின் பிரதிபலிப்பு. சில விஷயங்கள் என் எதிர்கால் லட்சியம்; 15 வருட என் திருமண வாழ்க்கையை திரும்பிப் பார்க்க வைத்தது. சே! இத்தனை வருடம் வீணடித்து விட்டோமோ என்று வருந்துகிறேன்; நான் யார் என்பதை சில கேள்விகளில் என்னை உணர வைத்தீர்கள். -  ஒரு சகோதரி


இது போன்ற நிகழ்ச்சிகளை அடிக்கடி நடத்துவதின் மூலம் குடும்பத்தை சீராக நடத்த உதவும். எல்லா பெண்களும் இது குறித்து மற்றவரிடம் ஆலோசனை கேட்க மாட்டார்கள். அதனால் இது போன்ற நிகழ்ச்சி அவசியம். இந்தப் பயிற்சி வகுப்பில் எனக்குப் பிடித்த விஷயம்: சொல்வதை உணர்வு பூர்வமாக சொன்னது; சொல்வதோடு நில்லாமல் செயல் படுத்தத் தூண்டிய விதம்;  அல்ஹம்துலில்லாஹ்! நிறைவாக இருந்தது! – ஒரு சகோதரி

இது எனக்கு சுய பரிசோதனை போல் இருந்தது. இந்தப் பயிற்சி வகுப்பில் எனக்குப் பிடித்த விஷயம்: மிக எளிமையாக எங்களிடமிருந்து கேட்டு பதிலளித்தது. – ஒரு சகோதரி

Masha Allah, It is amazing, interesting and extra ordinary. I have gathered more information to make my married life more beautiful. Jazakallah – One sister

இல்லற வாழ்க்கை, கணவன் மனைவி உறவு முறை பற்றி இவ்வளவு விரிவாக யாரும் பேசியது இல்லை; அதை பற்றி பேசிய விதம் நிறைவாக இருந்தது. – ஒரு சகோதரி

இந்த வகுப்பு மிகவும் உபயோகமாக இருந்தது. திருமணத்தைப் பற்றியும் இல்லறத்தைப் பற்றியும் பல விஷயங்களை அறிந்து கொண்டோம். மென்மேலும் இத்தகைய வகுப்புகள் நடை பெற வேண்டும் என விரும்புகிறோம். – ஒரு சகோதரி

இந்த பயிற்சி வகுப்பில் எங்களை மனம் விட்டு பேச வைத்தது எங்களுக்கு மிகவும் பிடித்தது. – ஒரு சகோதரி

அல்ஹம்துலில்லாஹ்! பெண் சமுதாயத்துக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய நிகழ்ச்சியாக உள்ளது. எப்போதும் சொற்பொழிவுகளுக்குச் செல்வோம், சொல்வதை கேட்போம் என்றில்லாமல் எல்லோரும் சிந்திக்கும் விஷயம் மிகவும் பிடித்திருந்தது. – ஒரு சகோதரி

இது மிகவும் உபயோகமான ஒரு நிகழ்ச்சி.  இதன் மூலமாக நான் என் வாழ்க்கையை தீர்மானிக்க எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்று புரிந்து கொண்டேன். அல்ஹம்துலில்லாஹ்! – ஒரு சகோதரி

இந்த பயிற்சி எங்களுக்கும் எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் நிறைய பயன் அளித்தது; மாஷா அல்லாஹ். இது போன்ற நிகழ்ச்சியில் எனது கணவர் கல்ந்து கொள்ள ஆசைப் படுகின்றேன். – ஒரு சகோதரி

இதில் பல நல்ல கருத்துக்கள் நிறைந்திருந்தன.  அல்ஹம்துலில்லாஹ்! இது போன்ற நிகழ்ச்சி அடிக்கடி நடக்க வேண்டும் என விரும்புகிறோம்.

The way you explain the topic was very effective and useful. – One sister

திருமண வாழ்க்கையைப் பற்றிய நல்ல விழிப்புணர்வு கிடைத்தது. – ஒரு சகோதரி

அனைத்தும் அருமை! இருவருக்கும் ஏற்படக்கூடிய பிரச்னைகள் பற்றிய தெளிவான விவரங்கள் கிடைத்தது. – ஒரு சகோதரி

நாம் அன்றாட வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. – ஒரு சகோதரி

அல்ஹம்துலில்லாஹ்! மிக மிக பயனுள்ளதாக இருந்தது. எவ்வளவோ அறியாத நபர்கள் இருக்கிறார்கள். அனைவருக்கும் இந்த பயிற்சி வகுப்பு சென்றடைய வேண்டும். இதே போல் இன்னும் நமக்கு தெரியாத பல விஷயங்களை இன்ஷா அல்லாஹ் இந்த வகுப்பு மூலம் தெரிந்து கொண்டு பயனடைய அல்லாஹ் கிருபை செய்வானாக. ஆமீன். – ஒரு சகோதரி

இந்த கால கட்டத்திற்கு அவசியமான ஒரு பயிற்சி. மிகவும் பயனுள்ள பயிற்சி. நான் என்னை புரிந்து கொண்டேன், மாற்றிக் கொள்வேன் இன்ஷா அல்லாஹ். – ஒரு சகோதரி

இது போன்ற வகுப்புகள் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளவை. இதன் மூலம் தன்னைத் தானே சோதித்து ஆராய்ந்து கொள்ள ஒரு வழியாக உள்ளது. – ஒரு சகோதரி

அல்லாஹ்வின் கிருபையால் தங்களின் மூலம் பல தெளிவுகளைப் பெற்றுக் கொண்டேன். என் கணவனை புரிந்து கொள்ள உதவியாக இருந்தது இந்த வகுப்பு  – ஒரு சகோதரி

அல்லாஹ்வின் கிருபையால் மிகவும் நன்றாக இருந்தது. மனதில் இருந்த குழப்பத்திற்கு ஒரு தீர்வு கிடைத்தது. – ஒரு சகோதரி