Showing posts with label கணவன் உரிமை. Show all posts
Showing posts with label கணவன் உரிமை. Show all posts

Saturday, December 21, 2013

மறுக்க வேண்டாம்!

நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: "தன் உடலைக் கணவனுக்கு விலக்கி வைக்காமலிருப்பது ஒரு மனைவியின் கடமையாகும். அது சிறிய ஒட்டகப் பல்லக்கில் அமர்ந்திருந்தாலும் சரி. கடமையான நோன்பைத்தவிர. கணவனின் அனுமதியின்றி நோன்பு நோற்காதிருப்பதும் அவள் மீது கடமையாகும். அதாவது அவள் அவ்வாறு செய்தால் குற்றவாளி ஆவாள். அந்த நோன்பு அவளிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்படாது.


கணவனின் அனுமதி இல்லாமல் மனைவி அவனது வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது. அவள் அவ்வாறு செய்தால் அவள் பாவமன்னிப்பு கோரி திரும்பும் வரையில் அல்லாஹ்வும், வானவர்களும் சபித்துக் கொண்டே இருப்பார்கள். கணவன் ஓர் அநியாயக்காரனாக இருப்பினும் சரி." (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) - நூல்: அபூதாவூத்)

கணவனுக்கே முதல் இடம்!

அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். "பெண்களுக்கு அதிகமான கடமைகள் யார் மீது உள்ளன?" என நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது அவளது கணவனிடத்தில் என்றார்கள். நான் கேட்டேன், "ஆண்களுக்கு மிக அதிகமான கடமைகள் யார் மீது உள்ளன?". நபி (ஸல்) அவர்கள், "அவனது தாயிடம்" என்றார்கள். (நூல்: ஹாக்கிம்)


ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் "ஹுஸைன் இப்னு முஹ்ஸினின் தந்தை வழிச் சகோதரியிடம் "உமது கணவன் உமக்கு சுவர்க்கமாகவும் நரகமாகவும் இருக்கிறான்" என்றார்கள். (நூல்: அஹ்மத்)