Saturday, May 16, 2026

கருத்துப் பரிமாற்ற இடைவெளி!

கருத்துப் பரிமாற்ற இடைவெளி!

Communication Gap!

இரண்டு வெவ்வேறு வகை மாம்பழங்கள்! கழுவி சுத்தம் செய்து அறிந்து இரண்டு தனித்தனித் தட்டுகளில் வைத்து மூடி உணவு மேசையில் வைத்திருக்கிறார் மனைவி!

இரண்டையும் திறந்து பார்க்கிறார் கணவர். ஏன் தனித்தனித் தட்டுகள் என்பது பற்றி கணவர்  சிந்திக்கவேயில்லை! ஒரு தட்டில் உள்ள பழம் முழுவதையும் சாப்பிட்டு விட்டார்.  

“நான் ஒரு பழம் முழுவதையும் சாப்பிட்டு விட்டேன்! இன்னொன்றை நீங்கள் சாப்பிட்டு விடுங்கள்!” என்று மனைவியிடம் சொல்கிறார்.  

“ஏங்க! இரண்டும் வெவ்வேறு பழம்ங்க! இதில் கொஞ்சம் அதில் கொஞ்சம் என்று சாப்பிட்டு இருக்கலாமில்ல?”  - என்கிறார் மனைவி!

எனக்கு எப்படிம்மா தெரியும்? நான் சாப்பிடுவதற்கு முன்னரே அல்லவா சொல்லியிருக்க வேண்டும்?

ஏன்? பார்த்தா தெரியவில்லை? இந்த பழம் வேறு அந்தப் பழம் வேறு என்று? 

எனக்கு எப்படிம்மா தெரியும்? எல்லாமே ஒரே நிறத்தில் ஒரே அளவில் தான் இருந்தன. என்ன செய்ய?

ஏங்க? ஒரே மாதிரி பழம் என்றால் நான் ஏங்க இரண்டு தட்டுகளில் தனித்தனியாக வைக்கிறேன்? என்கிறார் அவர்.

அது என் சிந்தனைக்கே வரவில்லையம்மா! என் அறிவில் ஓடிக் கொண்டிருந்தது - “என்னுடைய பிஸினஸ் பிரச்னைகள் சம்பந்தமாக என்ன செய்யலாம் என்றல்லவா யோசித்துக் கொண்டிருந்தேன்!!!

***

இந்த கருத்துப் பரிமாற்ற இடைவெளியைத் தவிர்ப்பது எப்படி? 

தான் இரண்டு தட்டுகளில் தனித்தனியாக வைத்தால் - கணவர் அதனைப் புரிந்து கொள்வார் என்று நினைத்துக் கொள்வது தான் தவறு! பழத்துண்டுகளைப் பார்த்தவுடனேயே - இவை வெவ்வேறு பழங்கள் என்று அவர் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொள்வது தவறு! 

எனவே - எந்த ஒரு செய்தியாக இருந்தாலும் - அதனை முழுமையாக - எந்த ஒரு ஊகத்துக்கும் இடம் கொடுக்காமல் - புரிய வைத்திட வேண்டும்!

இல்லாவிட்டால் கருத்துப் பரிமாற்ற இடைவெளி தான்! 

The result is a communication gap!

Sunday, October 12, 2025

இஸ்லாத்தின் பெண்களின் நிலை!

 இஸ்லாம் ஓர் அழகியல் மார்க்கம்! “இஹ்ஸான்” - என்பது இஸ்லாத்தின் அடித்தளத்தில் இருந்து கட்டி எழுப்பப்படும் ஓர் அழகியல் கோட்பாடு! CONCEPT OF BEAUTY!

இஸ்லாத்தின் எந்தப் பகுதியை எடுத்துக் கொண்டாலும் - எந்த பாடத்தைப் படித்துப் பார்த்தாலும் - அங்கே அழகியலை நாம் காணலாம்!
பேச்சு வார்த்தையில் அழகு; பெற்றோர்களிடம் அழகு; மனித உறவுகளில் அழகு; தர்மம் செய்வதில் அழகு; நீதி செலுத்துவதில் அழகு; கோப உணர்வை அடக்கி வைப்பதிலும் அழகு; பிறரை மன்னிப்பதில் அழகு; கணவன் மனைவி உறவில் அழகு; கொடுக்கல் வாங்கலில் அழகு; வணிகத்தில் அழகு; சமூக உறவில் அழகு - என்று வாழ்க்கையின் எல்லா மட்டங்களிலும் இஸ்லாத்தின் அழகியல் கோட்பாடு மிக விரிவானது!
உண்பது முதல் உறங்குவது வரை - அண்டை வீட்டார் உறவு முதல் அகில உலக அரசியல் வரை - இஹ்ஸான் எனும் அழகியல் கோட்பாட்டை மிக விரிவாகவும், மிக ஆழமாகவும் தன்னகத்தே கொண்ட - ஓர் அழகியல் (RELIGION OF BEAUTY) மார்க்கத்தை - 1500 ஆண்டு கால நாகரிகத்துக்குச் சொந்தமான நமது மார்க்கத்தை - ஓர் அழகற்ற மார்க்கமாக, “அசிங்கமான” (UGLINESS) மார்க்கமாகக் கெடுத்து வைத்திருப்பது தான் வஹ்ஹாபியிஸம் என்று விமர்சிக்கிறார் ஷெய்ஃக் காலித் அபூ அல் ஃபள்ல் அவர்கள்!
அவர்கள் எழுதிய நூல்களுள் ஒன்று தான்: THE GREAT THEFT
இன்றைய சூழ்நிலையில் - நம்மில் ஒரு சிலராவது அவசியம் படித்திட வேண்டிய நூல் இது!

***

இஸ்லாமிய வெறுப்பாளர்கள் - இஸ்லாத்தைத் தாக்குவதற்கென்று - மிக அதிகமாக கவனம் எடுத்துக் கொள்கின்ற ஒரு பகுதி தான் - இஸ்லாத்தில் பெண்கள் நிலை!
அவர்களுக்கு மிக அழகிய முறையில் - இஸ்லாத்தில் பெண்களின் அந்தஸ்து - குறித்து எடுத்துச் சொல்வதற்கும், பொதுவாக மற்றவர்களிடம் நாம் கலந்துரையாடுவதற்கும், நம்மை நாம் தயார்படுத்திக் கொண்டிட வேண்டிய சூழலில் தான் நாம் இருக்கின்றோம்.
இது குறித்த ஆய்வுகளுக்கான நம்முடைய தயாரிப்புகள் என்னென்ன?
நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் சீரத் - வாழ்க்கை வரலாற்றில் - நபியவர்களின் வருகைக்கு முன்னர் - பெண்களின் நிலை குறித்த ஆய்வு.
மக்காவில் வைத்து நபி (ஸல்) அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட இறைமறை வசனங்களில் பெண்களின் நிலை குறித்து - அல் குர்ஆன் கூறுவது பற்றிய தெளிவு.
அதே போல மதினாவில் வைத்து - இறக்கியருளப்பட்ட இறைமறை அத்தியாயங்களின் அடிப்படையில் - இஸ்லாமிய சமூக அமைப்பில் - பெண்களின் அந்தஸ்து - படிப்படியாக எவ்வாறு உயர்த்தப்பட்டது என்பது குறித்த ஆய்வு.
இஸ்லாமிய நாகரிக வரலாற்றில் - ஆணாதிக்கத்தின் தாக்கம் பற்றியும், அதே வேளையில் திறன் மிக்க முஸ்லிம் பெண்மணிகளின் பங்களிப்பு குறித்த ஆய்வுகளையும் படித்துத் தெளிதல்.
வஹ்ஹாபியிஸம் பெண்களை - எவ்வாறு மிகத் தவறாகச் சித்தரித்துக் காட்டுகிறது என்பது குறித்தும், அவர்கள் அள்ளிக் கொட்டுகின்ற குளறுபடியான மார்க்கத் தீர்ப்புகள் குறித்தும் - இவை குறித்து இன்ன பிற மார்க்க அறிஞர்கள் கூறுவதென்ன என்பனவற்றையும் படித்துத் தெளிதல்.
இதனைத் தொடர்ந்து - இன்றைய இளம் முஸ்லிம் பெண்மணிகளுக்கு - இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள கண்ணியம், உரிமைகள், குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி செய்தல்.
பின்னர் - இஸ்லாமிய வெறுப்பாளர்களின் வெறுப்புக் கருத்துகளுக்கு அழகிய முறையில் பதிலளிப்பது எப்படி என்ற தயாரிப்பில் ஈடுபடுதல்.
இந்தத் திசையில் - துவக்கமாக நான் பரிந்துரைக்கும் நூல் தான் - ஷெய்ஃக் காலித் அபூ அல் ஃபள்ல் அவர்கள் எழுதிய - THE GREAT THEFT - எனும் நூல் ஆகும். இந்த நூலின் அத்தியாயங்களுள் ஒன்று தான்: THE NATURE AND ROLE OF WOMEN.
படிப்போம்.

***
இஸ்லாத்தில் பெண்களின் நிலை என்ன என்பதை ஆய்வு செய்வதற்கு முன்னர் - நபியவர்களின் இறைத்தூதுவக் காலத்துக்கு முன் அந்த அரபுலகத்தில் பெண்களின் நிலை எப்படியிருந்தது என்று ஆய்வு அவசியம்.
அந்தக்காலத்து பெண்களின் நிலையை உள்ளபடியே நாம் புரிந்து கொண்டால் தான் - இஸ்லாம் - பெண்களுக்கு அளித்த உயர்வை,கண்ணியத்தை, உரிமைகளை நாம் புரிந்து கொள்ள முடியும். அது எப்படிப்பட்ட “மாற்றம்” என்பதனையும் நாம் உணர்ந்து கொள்ளவும் முடியும்!
இது குறித்து இங்கே விரிவாக எதுவும் நான் எழுதப் போவதில்லை! ஒன்றே ஒன்றைத் தவிர!
அது என்ன? ஷெய்ஃக் காலித் அபூ அல் ஃபள்ல் அவர்கள் தனது சீரா உரையிலே ஒன்றைச் சொல்கிறார்கள்:
நபியவர்களின் இறைத்தூதுத்துவத்துக்கு முன்னரான காலப்பகுதியில் பலம் மிக்க ஒரு சில குலத்தவர்கள் - பலம் குறைந்த குல மக்களை (RAID) எதிர்த்துத் தாக்குவார்களாம். அவர்கள் பலம் குறைந்தவர்கள் என்பதுவன்றி வேறு எந்த காரணத்துக்காகுவும் தாக்கப் படுவதில்லை!
பொருள்களைக் கவர்ந்து கொள்வார்கள். ஆண்களை அடிமைப்படுத்தி அழைத்து வந்து விடுவார்கள். பெண்களையும் தள்ளிக்கொண்டு வந்து விடுவார்களாம்.
அந்த அடிமை ஆண்களை (மவ்லா) மற்றவர்களுக்கு பணி செய்திட அனுப்பி, அதில் கிடைக்கும் பொருளாதாரத்தைச் சுருட்டிக் கொள்வது!
அந்த அடிமைப் பெண்களை விபச்சாரத்துக்குத் தள்ளி, அதில் கிடைக்கும் வருமானத்தையும் அனுபவித்துக் கொள்வது!
எங்கே தம் பெண்மக்கள் கவர்ந்து செல்லப்பட்டு விபச்சாரத்தில் தள்ளப்பட்டு விடுவார்களோ என்று அஞ்சி - தம் குலத்தின் மானத்தைக் காத்துக் கொள்வதற்காகவே - பலம் குறைந்த குலத்தைச் சேர்ந்தவர்கள் தம் பெண் குழந்தைகளைக் கொன்று விடும் பழக்கம் - ஏற்பட்டு விட்டதாம்!
அன்றைய பெண்களின் நிலையை அறிந்து கொள்ள சீரத்தில் காணப்படும் இந்த ஒரு சான்று இப்போதைக்குப் போதும்…
இப்படிப்பட்டதொரு மோசமான கால கட்டத்தைத் தான் தனது இறுதி நபியை அனுப்பிடத் தேர்வு செய்கின்றான் இறைவன்!

இன்ஷா அல்லாஹ் தொடர்வோம்!

Tuesday, October 7, 2025

திருமணச் சிக்கல்கள் - தீர்வுகள்!

அக்டோபர் 07, 2025  


மாமியார் கொடுமை என்றால் அது எப்படியிருக்கும் என்று எனக்கு 12 வயதிலேயே தெரியும். அதனைக் கண்ணால் கண்டவன் நான். ஆனால் அந்தக் கொடுமைகள் - ஒரு ஐம்பதுக்கும் மேலான ஆண்டுகளுக்குப் பிறகு இன்றும் தொடர்வதை வேதனையுடன் கவனித்து வருகிறேன். 


அது போல - கணவன்-மனைவியர் இல்லற வாழ்விலும் ஏகப்பட்ட சிக்கல்கள். புரிந்துணர்வு என்பது மிகவும் குறைவே. பொதுவாக நற்பண்புகள் (akhlaq) குறித்தே என் முழுக் கவனத்தையும் செலுத்தி வந்து கொண்டிருந்த நான் - திருமண வாழ்வில்  நற்குணங்களைக் கடைபிடிப்பதில் நாம் ஏன் அலட்சியமாக இருகின்றோம் என்றும் சிந்தித்து வந்திருக்கின்றேன். 


மேலும் - நம் சமூகத்தில் நிலவுகின்ற விவாகரத்து குறித்த அணுகுமுறைகளையும் கவலையுடன் கவனித்துக் கொண்டு தான் வருகின்றேன். விவாக விலக்கு பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறதே தவிர - அதனைக் குறைக்கும் வழிதான் ஏனோ புலப்படவில்லை!  


நூல்கள் வாயிலாகவும், இணைய தளங்கள் வாயிலாகவும் - ஆன்மிக ரீதியான, உளவியல் ரீதியான (psycho-spiritual) இஸ்லாமிய வழிகாட்டுதல்களைத் தொடர்ந்து அறிந்து கொள்வதில் ஆர்வம் செலுத்தியிருக்கிறேன். மிகச் சிறந்த மார்க்க அறிஞர்கள் மற்றும் இஸ்லாமிய உளவியல் ஆய்வாளர்களின் கருத்துக்களையெல்லாம் சேகரித்து உள்வாங்கியிருக்கின்றேன்.  


திருமணத்துக்கு முன்னும் பின்னும் தேவைப்படுகின்ற வழிகாட்டுதல்கள் குறித்து சொற்பொழிவாற்றியிருக்கின்றேன். வகுப்புகள் நடத்தியிருக்கின்றேன். பயிலரங்கங்கள் நடத்தியிருக்கின்றேன். பல கட்டுரைகள் எழுதியிருக்கின்றேன். தனிப்பட்ட முறையில் பலருக்கு திருமண ஆலோசனைகளும் வழங்கியிருக்கின்றேன். 


ஆனாலும் - எனது அணுகுமுறையில் - எனக்கு திருப்தி ஏற்பட்டதே இல்லை! குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவுக்கு எந்த ஒரு மாற்றத்தையும் என்னால்  ஏற்படுத்திட இயலவில்லை! 


ஆனால் அதற்கான காரணம் என்னவென்று புரிந்தது - ஒரு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தான்…..


தொடர்ந்து பேசுவோம்.

Sunday, January 4, 2015

முதல் மூன்று நிமிடங்கள் மிகவும் முக்கியம்!

கருத்து வேறுபட்ட கணவன் மனைவியர் உரையாடத் தொடங்கினால் - அவர்களின் உரையாடலின் முதல் மூன்று நிமிடங்கள் எப்படிச் செல்கிறது என்பதை வைத்தே - அவர்கள் கணவன் மனைவியராகத் தொடர்வார்களா அல்லது அது மண விலக்கில் போய் முடியுமா என்று சொல்லி விட முடியுமாம்!

அந்த முதல் மூன்று நிமிடங்கள் அவ்வளவு முக்கியமாம்!

Saturday, December 6, 2014

சுன்னத்தான இல்லறம்! - நூல் வடிவில்.....

சுன்னத்தான இல்லறம்!

(உன் மனைவி ஒரு பொக்கிஷம்!)

S.A  மன்சூர் அலி

முன்னுரை

இன்னும், நீங்கள் அவர்களிடம் மன அமைதி பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே மவத்தத் எனும் அன்பையும், இரக்கத்தையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (குர்ஆன்: 30:21)

Friday, December 5, 2014

தொலைபேசி தலாக்!

இஸ்லாமிய மாத இதழ்களில் இப்படி சில கேள்விகள் கேட்கப் படுகின்றன:

“எஸ்.எம்.எஸ் வழியே அல்லது தொலைபேசி வழியே தலாக் சொன்னால் தலாக் நிகழ்ந்து விடுமா?” ஆம்! நிகழ்ந்து விடும் என்று ஒரே வரியில் பதில் அளிக்கப் படுகிறது.

ஆனால் பின்னணி என்ன என்பது புரிந்து கொள்ளப் படாமலே பதில்கள் அளிக்கப் படுவதால், பலரது வாழ்க்கை பாதிக்கப் படுகிறது என்பதை ஏனோ புரிந்து கொள்ளத் தவறி விடுகிறோம். சாதாரணமாக மருத்துவம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் மருத்துவர்கள் கூட, தங்கள் ஆலோசனைகளை எழுதி விட்டு, இறுதியில் அருகில் உள்ள மருத்துவரை அணுகவும் என்று முடிக்கிறார்கள்.

Tuesday, November 18, 2014

இது யார் சொல்லித்தந்ததோ தெரியவில்லை!

"பெண்களைப் போல் அழாதே?!"

"உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்! அதனை வெளிக்காட்டாதே!

"உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது என்பதெல்லாம் பெண்களுக்கு மட்டும் தான். ஆண்களுக்கு அது பலவீனம்!"

"ஆண்களைப் பொருத்தவரையில் - அவர்கள் - வெளிப்படுத்திடத் தக்க  ஒரு உணர்ச்சி இருக்கிறதென்றால் அது கோபம்மட்டும் தான்!"

Thursday, November 13, 2014

மாய சுழற்சி மறைந்து விட்டதா?

ஒரு ஆண் - தன் மனைவியிடமும், தான் பெற்ற பிள்ளைகளிடமும், மற்றவர்களிடமும் மிக மிக முக்கியமாக எதிர்பார்ப்பது என்ன?

மற்றவர்களால் - தான் - கண்ணியப்படுத்தப்பட வேண்டும்! (To be respected). இதுவே ஒவ்வொரு ஆண்மகனின் முதன்மையான தேவையும், எதிர்பார்ப்பும் ஆகும்! (Primary Need for men).

இதனை அனைவருக்கும் முதலாக ஒரு மனைவி புரிந்து கொண்டிருக்க வேண்டும். அதாவது ஒரு கணவனின் முதல் தேவையே - அவன் கண்ணியப் படுத்தப்படுவது தான்!

Sunday, November 9, 2014

பாடம் படித்துக் கொள்ள வேண்டியது கணவன் மனைவி இருவரும் தான்!

கணவன் மனைவி குடும்பத்துடன் வெளியே சென்று விட்டு வீட்டுக்குத் திரும்பும் நேரம்.

"ஏங்க! லேட்டாயிடுச்சுங்க! ஏதாவது ஹோட்டலில் டின்னர் சாப்பிட்டு விட்டுப் போயிடலாங்க!" - இது மனைவி.

"ஓக்கே!" - ஒரே வார்த்தையில் பதில்! - இது கணவன்.

"எந்த ஹோட்டல் போகலாம்னு நீங்களே சொல்லுங்க!" - இது மனைவி.

"எதுவானாலும் பரவாயில்லை!" -  நீயே முடிவு பண்ணு!"

Thursday, November 6, 2014

கணவன் மனைவியருக்குள் விவாதமா?

கணவன் மனைவி விவாதங்களின் போது மூன்று விஷயங்களைக் கடைபிடிப்பது அவசியம் என்று இஸ்லாமிய அறிஞரும், குடும்ப நல ஆலோசகருமான ஷேஃக் யாசிர் ஃபஸாஃகா அவர்கள் கற்றுத் தருகிறார்கள்:

1 நாம் சொல்ல வருகின்ற கருத்து ஒன்றும் அவ்வளவு முக்கியம் அல்ல! நாம் யாரிடம் அந்தக் கருத்தைச் சொல்ல வருகின்றோமோ அந்தத் துணை நமக்கு முக்கியம். இதனையே அவர் - "The person is always more important than the point!" என்கிறார்.

சூழ்நிலை அறிந்து பேசுங்கள்!

கணவன் மனைவி இருவருக்கும் ஏதோ ஒரு விஷயத்தில் கடுமையான கருத்து வேறுபாடு. கோப உணர்ச்சி கொப்பளிக்கிறது. அது குறித்துப் பேசி விடலாம் என்று கணவனோ அல்லது மனைவியோ நினைக்கிறார்கள். 

ஆனால் கருத்து வேறுபாடுகள் குறித்துப் பேசிடத் தகுந்த சூழல் அந்த சமயத்தில் அங்கு இல்லையெனில் - கணவனும் மனைவியும் சற்றே பொறுமை காப்பது நல்லது. தகுந்த சூழல் ஒன்று உருவாகும் வரை அவர்கள் அது குறித்து வாய் திறக்காமல் இருப்பதே சாலச் சிறந்தது. 

இவர் கிட்ட பகிர்ந்து கொள்ளாமல் நான் யாரிடம் பகிர்ந்து கொள்வது?

இன்னொரு சம்பவம்.

கணவனுக்கு டின்னர் பரிமாறுகிறார் மனைவி. தோசை தான். மனைவி பேசத்தொடங்குகிறார். கணவன் சாப்பிட்டுக் கொண்டே – மனைவி பேசுவதைக் காதில் வாங்குகிறார்.

“ஏங்க, சம்சாத் மச்சி வந்திருந்திச்சா? எல்லாத்தையும் மச்சி கிட்ட நான் சொன்னேங்க. அவங்க நேரா அம்மாகிட்ட போய், “ஏம்மா, மச்சி தான் உங்களை நல்லா கவனிச்சுக்குதே; ஏங்க, அவங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க வேண்டாமா? ஏன் இப்படி அவங்கள தொந்தரவு பண்ணுகிறாயாம்?" - என்று கேட்டாங்களாம். அதுக்கு உங்க அம்மா சொல்றாங்களாம்…

உங்க கிட்ட எதையுமே ஷேர் பண்ணிக்க முடியாதே!

பொதுவாக ஆண்களைப் பொருத்தவரை - அவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் அதன் முடிவுக்கே (result) முக்கியத்துவம் அளிப்பார்கள். அந்த முடிவுக்கு முன்னால் நடக்கின்ற எந்த விஷயமும் ஆண்களுக்கு அவ்வளவாக இனிப்பதில்லை! 

சான்றாக - குடும்பத்தினர் - ஊர் போய்ச் சேர்ந்து விட்டார்களா என்பதை அறிந்திட மட்டுமே ஆவல். எப்படிப்போய்ச் சேர்ந்தார்கள் என்பது அவர்களுக்கு முக்கியம் அல்ல. 

Friday, May 30, 2014

என்னிடம் திரும்பு! என்னைக் கவனி! நான் சொல்வதைக் கேள்! அது போதும் எனக்கு!

சின்னச் சின்ன எதிர்பார்ப்புகள் மனைவியருக்கு நிறைய இருக்கும். கணவன்மார்களுக்கோ – “இது ஒரு பெரிய விஷயமா? இதற்குப் போய் ஏன் இவள் இப்படி அலட்டிக் கொள்கிறாள்?” என்றே எண்ணத் தோன்றும்.

ஆனால் தமது சின்னச் சின்ன ஆசைகள் – கணவனால் – தொடர்ச்சியாக அலட்சியப்படுத்தப் படும்போது மனைவி என்ன நினைக்கிறாள்? “நான் இவ்வளவு சொல்லியும் இவர் கேட்கவில்லை என்றால் என்ன பொருள்? எனது உணர்வுகளை இவர் மதிப்பதே இல்லை!” என்பது தான்!

"தவறு அவர் மீது மட்டும் அல்லவே!"

குற்றம் சுமத்திக் கொண்டே இருக்கும் கெட்டப் பழக்கத்திலிருந்து விடுபட ஒரு உதாரணம் சொல்லப்படுகின்றது.

ஒரு கொடிய விஷப்பாம்பு அது! வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அது மற்றவர்களைக் கொட்டி விடும்! அந்தப் பாம்பு கொட்டினால் எப்படி வலிக்கும் என்பதும் உங்களுக்குத் தெரியும்; அது மரணத்துக்கும் வழி வகுக்கும் என்பதும் உங்களுக்குத் தெரியும்; அப்படிப்பட்ட பாம்பு ஒன்றிடம் போய் நீங்கள் உங்கள் கையை நீட்டுவீர்களா?

Thursday, May 22, 2014

குற்றம் சுமத்திக் கொண்டே இருந்தால் குடும்பத்தில் அமைதி குலைந்து விடும்!

எதற்கெடுத்தாலும் குற்றம் பிடிப்பவரின் மனநிலை என்ன தெரியுமா?

"எடுத்துக் கொண்ட காரியம் ஒன்றில் எனக்குத் தோல்வி ஒன்று ஏற்பட்டு விட்டால் அதன் பொருள் என்ன? அந்தக் காரியத்தை செய்வதற்கு நான் இலாயக்கானவன் இல்லை என்றல்லவா ஆகி விடும்?

Wednesday, May 21, 2014

என் தோல்வி அனைத்துக்கும் என் கணவனே காரணம்!


முந்தைய பதிவில் சொல்லப்பட்ட அதே போன்ற உதாரணத்தை மனைவிக்கும் நாம் சொல்லலாம்.

மனைவியின் உறவினர் அன்று மாலை வீட்டுக்கு வருவதனால், டின்னருக்காக, மனைவி கொஞ்சம் முந்திரிப்பருப்பும் திராட்சைப்பழமும் வாங்கிக் கொண்டு வரச்சொல்ல, மாலையில் அதனை வாங்க மறந்து விட்டுக் கணவன் வீட்டுக்கு சற்று தாமதமாகவே வந்து நிற்க – மனைவி “எங்கே முந்திரியும் திராட்சையும்?” என்று கேட்க,

"என் தோல்வி அனைத்துக்கும் என் துணைவியே காரணம்??"

ஆங்கிலத்தில் Blaming என்று ஒரு சொல், இதன் பொருள் என்ன?

கடுமையான சொற்களால் ஒருவரை குற்றம் சுமத்துவதற்குப் பெயர் தான் Blaming!

இதில் வார்த்தைகளாலேயே ஒருவரை தண்டிப்பதும், மட்டம் தட்டுவதும், இழிவு படுத்துவதும் அடங்கும். பார்க்கின்ற பார்வையினாலும், முகம் காட்டும் கோணல்களாலும் ஒருவரைத் தண்டிப்பதும் அடங்கும்!

Monday, May 19, 2014

முதன் முதலாக உங்கள் மனைவியின் பெற்றோர் வீட்டுக்குச் செல்கிறீர்களா?


திருமணம் ஆனவுடன் உங்கள் மனைவியின் பெற்றோர் வீட்டுக்கு முதன் முதலாக நீங்கள் செல்கிறீர்கள். அங்கே நீங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

Tuesday, May 13, 2014

உங்கள் மனைவி - குழந்தையையும் உங்களையும் சேர்த்தே கவனித்துக் கொள்கிறார்!!

சுன்னத்தான இல்லறம்: 

சென்ற பதிவில் "குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் சோகம்" (postpartum depression) - பற்றி எழுதியிருந்தோம்.  இப்படிப்பட்ட சோகத்துக்கு 67% இளம் பெற்றோர்கள் ஆளாகிறார்களாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.